திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இன்று காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துறை சார்பில் சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவக்கி தூய நெஞ்சக் கல்லூரி வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.
இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்ணன், மாவட்ட முடக்கியல் நிபுணர் இனியன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல துறை அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments