Breaking News

சக குற்றவாளியை ஜாமினில் எடுக்காததால் ஆத்திரத்தில் டிரைவரை கத்தியால் வெட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்

 

இளையராஜா

அரியாங்குப்பம் புதுக்குளத்தை சேர்ந்தவர் அலெக்ஸ். இவரை கடந்த ஜனவரி மாதம் சாராய கடையில் ஏற்பட்டதகராறில் மணவெளி பகுதியை சேர்ந்த இளையராஜா. டிரைவர். வெங்கடேசன், செல்வகுமார் ஆகிய மூவரும் சேர்ந்து அலெக்ஸின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து இளையராஜா உட்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வெங்கடேசன்


இந்நிலையில், இளையராஜாவை அவரது மனைவி, கடந்த ஜூலை மாதம் ஜாமீனில் எடுத்தார். இதற்கு பின் வெங்கடேசன், செல்வகுமார் ஆகிய இருவரும் சிறையில் இருந்து வெளியில் வந்தனர்.


செல்வகுமார்

நேற்று நோணாங்குப்பம் ஆறு
அலுத்துவெளியில் இளையராஜா, வெங்கடேசன், செல்வகுமார் ஆகிய மூவரும் மது அருந்தும் போது எங்களை ஏன் ஜாமினில் எடுக்கவில்லை எனக் கேட்டு வெங்சடேசன், செல்வகுமார், இருவரும் சேர்ந்து, இளையராஜாவை கத்தியால் வெட்டினர். அதில், பலத்த காயமடைந்தவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, வெங்கடேசன்,35; செல்வகுமார், 32; ஆகிய இருவரையும் கைது செய்து, இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

No comments

Copying is disabled on this page!