கோவில்பட்டியில் ரேஷன் அரிசியை அரைத்து மாவாக பதுக்கி வைத்திருந்தவர் கைது - 500கிலோ ரேஷன் அரிசி மாவு பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரேஷன் அரிசியை அரைத்து மாவாக பதுக்கி வைத்திருந்தவர் கைது - 500கிலோ ரேஷன் அரிசி மாவு பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்தையம்மாள் தெருவை சேர்ந்த ரத்தினவேல் என்பவர் வீட்டில் ரேஷன் அரிசியை கடத்தி மாவு மூட்டைகளாக அரைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை எடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். இதில் ரேஷன் அரிசியை அரைத்து மாவு மூட்டைகளாக வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரத்தினவேலை கைது செய்த போலீசார் 500 கிலோ ரேஷன் அரிசி மாவினை பறிமுதல் செய்து , உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்
No comments