11 மாத பெண் குழந்தைக்கு தலையில் முன் பகுதியில் செயற்கை மூளை உறை பொருத்தி காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை சாதனை
காரைக்குடி அருகே ஆலங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாரின் 11 மாத பெண் குழந்தை இரு சக்கர வாகனத்தில் ஏற்பட்ட விபத்தில் மண்டையில் முன் பகுதி படுகாயம் அடைந்தது. உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிலலட்சங்கள் வரை செலவாகும் என்று கூறியதால் அதற்கு பணம் இல்லாததால் மதுரையில் ஒரு மருத்துவமனையில் தலையில் அறுவை சிகிச்சை செய்தனர் அங்கு 10 நாட்கள் இருந்து விட்டு வீடு திரும்பினர்.
அதன் பின்பு குழந்தையின் தலையில் வீக்கம் ஏற்பட்டது, மீண்டும் மதுரைக்கு போக விரும்பாத பெற்றோர் குழந்தையை காரைக்குடி குழந்தைகள் சிறப்பு மருத்துவரான டாக்டர் ராஜ்குமாரை சந்தித்தனர். பரிசோதனை செய்தவர் குழந்தைக்கு ஸ்கேன் செய்ய அறிவுறுத்தினார், ஸ்கேன் செய்து பார்த்த போது மூளையில் தண்டுவட திரவம் கசிவு ஏற்பட்டு மூளை உறையில் சேர்ந்து வீக்கமாக உள்ளதை கண்டறிந்தார்.
உடனடியாக காரைக்குடி காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு அங்கு தலைமை மருத்துவர் குமரேசன் ஆலோசனை பேரில், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் பாலசுப்ரமணியன், மயக்கவியல் மருத்துவர் மாணிக்கம், குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ராஜ்குமார் அடங்கிய குழுவினர் குழந்தைக்கு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையின் தலையின் முன் பகுதியில் செயற்கை மூளை உறை பொருத்தி நீர் கசிவை தடுத்தனர். குழந்தை தற்போது நலமாக உள்ளது.
குழந்தையின் பெற்றோர் பொருளாதாரத்தில் பின் தங்கள் நிலையில் இருப்பதால். மருத்துவமனையின் டைம்ஸ் ஹல்த் கேர் பவுண்டேஷன் மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் குறைந்த கட்டணத்தில் அறுவை சிகிச்சை செய்ததற்கு குழந்தையில் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
No comments