ரங்கசாமியை சுற்றி ஊழல்வாதிகளும் திருடர்களும் தான்அன்பழகன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்
ரங்கசாமியை சுற்றி ஊழல்வாதிகளும் திருடர்களும் தான் இருக்கிறார்கள் ஊழலை தட்டிக்கேட்டால், எங்கு ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில் ரங்கசாமி இருப்பதாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ரெட்டியார்பாளையம் பத்திரப்பதிவு துறை அலுவலகம் அருகில் நடைபெற்றது.
மாநில அவைத்தலைவர் அன்பானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,கோவை புறநகர் மாவட்ட கழக இணைச் செயலாளர் மணிமேகலை,திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலளர் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் மிஷின் இலவச புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்,
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 111 தடவை ரேஷன் கடை திறந்து அரிசி வழங்க இருக்கிறோம் என்று முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் தெரிவித்திருக்கிறார்கள், ஆனால் இதுவரை அதை செயல்படுத்தவில்லை.
இந்தியாவிலேயே கல்வி உரிமைச் சட்டம் ,பொது விநியோகத் திட்டம் இல்லாத ஒரே மாநிலம் புதுச்சேரி மட்டும் தான் என்றும் அன்பழகன் சுட்டி கட்டினார்.
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மின்துறையை தனியார் மயமாக்க யாரோ ஒருவர் பயனடைய 400 கோடி ரூபாய் செலவில் ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம் கொண்டு வருகிறார்கள், மக்களைப் பற்றி நினைக்காத இந்த அரசு நிர்வாகம் முழுமையாக தோல்வி அடைந்து விட்டது என்றார்.
புதுச்சேரி காரைக்காலில் கோவில் இடங்கள் பட்டா போட்டு அபகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது அதிகாரியை தண்டிக்கும் அந்த அரசு அதற்கு காரணமான ஆட்சியாளர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் தண்டிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். ஊழல்களை தட்டிக் கேட்க முடியாத முதல்வராக ரங்கசாமி இருக்கிறார், ஊழல்வாதிகள் தான் ரங்கசாமியை சுற்றி இருக்கிறார்கள் ஊழலை தட்டி கேட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தில ரங்கசாமி இருப்பதாகவும் அன்பழகன் கடுமையாக சாடினார்.
No comments