உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுநெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பாயி 70 வயதான இவர் செவ்வாய்க்கிழமை மாலை காட்டுநெமிலி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்கும் போது உளுந்தூர்பேட்டையில் இருந்து மங்கலம்பேட்டை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் குப்பாயி மீது மோதியது இதில் குப்பாயி மற்றும் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த பாலி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் வயது 20 ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் உயிருக்கு நிலையில் இருந்த குப்பாயி கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குப்பாயி உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த ரஞ்சித் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செய்திகளுக்காக செல்வகுமார்.
No comments