மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் நாளை ஒரு நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் காரணமாக ஒரு சில ரயில்களில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு வரும் பயணிகள் ரயில் மயிலாடுதுறைக்கு முன்னதாக குத்தாலம் ரயில்வே நிலையத்தில் நிறுத்தப்படும்.
இதுபோல் மயிலாடுதுறையிலிருந்து பிற்பகல் 12 மணிக்கு புறப்பட்டு திருச்சி மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் ரயிலானது 30.08.2024 வெள்ளிக்கிழமை அன்று மட்டும் மயிலாடுதுறையிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக குத்தாலம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
இதுபோல் காலை 8:35 மணிக்கு மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறையில் வரும் ரயில் மற்றும் மாலை மயிலாடுதுறையிலிருந்து 5:15 மணிக்கு புறப்பட்டு மன்னார்குடி செல்லும் ரயில் நாளை ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments