தேசிய பேரிடர் குழுவின் பிராந்திய மையம் நெல்லையில் அமைய உள்ளது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள மாநில பேரிடர் சவால்களை சமாளிக்கும் வகையில் பிராந்திய தேசிய பேரிடர் மையம் செயல்பட உள்ளது.
30 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு பிராந்திய மையத்தில் 24 மணி நேர பணியில் இருக்கும். அதி நவீன மீட்பு உபகரணங்கள், தொலைதொடர்பு சாதனங்களுடன் பிராந்திய மையம் செயல்பட உள்ளது.
இரசாயனம்,கதிரியக்கம் மற்றும் உயிரியல் சார்ந்த பேரிடர்களை சமாளிக்கும் உபகரணங்களும் பிராந்திய குழுவில் இடம்பெறுகிறது. ராதாபுரம் மாணவர்கள் தங்கும் விடுதியில் தற்காலிகமாக பிராந்திய குழு செயல்பட உள்ளது. நிரந்தர இடம் தேர்வு செய்யப்படும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
No comments