கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்.
இந்த மாபெரும் கழக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரும் வசந்தம் க.கார்த்திகேயன், B.Sc,MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கழக நிர்வாகிகள் எவ்வாறு திறம்பட ஆக்கப் பணிகள் செய்திட வேண்டும் என்பது குறித்தும், சார்பு அணிகளின் நிர்வாகிகள் தங்களது பகுதியில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும், கழக முப்பெரும் விழாவில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் சிறப்புரையாற்றி, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக சிறப்பாக பணியாற்றிய மாவட்டக் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு, பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குள் பெருந்தலைவர், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பெருந்தலைவர்கள் துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உடன்பிறப்புகள் என பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments