புதிய தொழில் தொடங்கிய பயனாளிகளை “நிறைந்த மனம்”; திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி நேரில் சந்தித்து, பயனாளிகளிடம் திட்டங்களின் பயன்களை கேட்டறிந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், குளிச்சார் கிராமத்தில் மாவட்ட தொழில் மையத்தின் புதிய தொழில்முனைவோர் முன்னோடிகள் திட்டம், பிரதான் மந்திரியின் உணவு வேலை வாய்ப்பு பெருக்கத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயன்பெற்று, புதிய தொழில் தொடங்கிய பயனாளிகளை “நிறைந்த மனம்”; திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி நேரில் சந்தித்து, பயனாளிகளிடம் திட்டங்களின் பயன்களை கேட்டறிந்தார்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (தமிழ்நாடு சிட்கோ) 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்துதல் மற்றும் வளர்ச்சிப் பணிகளின் குறிப்பிடத்தக்க பங்குகளை வகிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சிட்கோ தொழிற்பேட்டை குளிச்சார் கிராமத்தில் இயங்கி வருகிறது. இத்தொழிற்பேட்டையானது, 12.56 ஏக்கர் பரப்பளவில் சிட்கோவால் 2009-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை சிட்கோ தொழிற்பேட்டையில் 61 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 35 தொழில்மனைகள் செயல்பட்டு வருகின்றன.
மற்ற தொழில் மனைகளில் உள்ள நிறுவனங்கள் கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகின்றது. மயிலாடுதுறை தொழிற்பேட்டையில் டயர் ரீட்டையர், சிமெண்ட் கல் தயாரித்தல், பெயிண்ட் தயாரித்தல், உணவு மற்றும் மசாலா பொருட்கள் தயாரித்தல், இரும்பு தகர சீட் தயாரித்தல், பொது பொறியியல் தொடர்பான தொழில்கள், அலுமினிய கதவு தயாரித்தல் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
அந்த வகையில், குளிச்சார் கிராமத்தில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் வழியாக கௌதம் ராஜராஜன் ரூ.92 இலட்சத்து 53 ஆயிரம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று, அமைக்கப்பட்ட உயிரி எரிபொருள் நிறுவனத்தினை மாவட்ட ஆட்சியர் இன்று பார்வையிட்டு, திறந்து வைத்து, திட்டத்தின் பயன்கள் மற்றும் தொழிற்சாலையின் செயல்பாடுகள் விவரங்களை கேட்டறிந்தார்கள். அப்போது, பயனாளி தான் மாவட்ட தொழில் மையத்தின் வழியாக புதிய தொழில் முனைவோர் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், ரூ.92 இலட்சத்து 53 ஆயிரம் கடனுதவி பெற்றதாகவும், இதில் ரூ.11 இலட்சத்து 81 ஆயிரம் அரசு மானியமும் தனக்கு கிடைப்பதாக தெரிவித்தார்கள். மேலும், இத்திட்டத்தின் கீழ், தான் கருவேல மரங்களை பொடியாக்கி அதன் மூலம் தொழிற்சாலைகளில் எரிவாயுவுக்கு தேவையான துகள்களை பெறுகிறேன்.
இத்திட்டத்தின் கீழ், தான் மிகவும் பயன்பெறுவதாகவும், தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பயனாளி கௌதம் ராஜராஜன் கூறினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் குளிச்சார் கிராமத்தில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பிரதான் மந்திரியின் உணவு வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டத்தின் கீழ், பாரத வங்கியின் வழியாக சிவராமன் அவர்கள் ரூ.50 இலட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று, அமைக்கப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும்; நிறுவனத்தினை மாவட்ட ஆட்சியர் இன்று பார்வையிட்டு, திறந்து வைத்து, திட்டத்தின் பயன்கள் மற்றும் தொழிற்சாலையின் செயல்பாடுகள் விவரங்களை கேட்டறிந்தார் அப்போது, பயனாளி தான் மாவட்ட தொழில் மையத்தின் வழியாக பிரதான் மந்திரியின் உணவு வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் கடனுதவி பெற்றதாகவும், இதில் ரூ.10 இலட்சம் அரசு மானியமும் தனக்கு கிடைப்பதாக தெரிவித்தார்கள்.
மேலும், தேங்காயிலிருந்து உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை இத்திட்டத்தின் கீழ் தான் துவங்கியுள்ளதாகவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதில் தமிழக அரசு முன்னோடியாக திகழ்கிறது. இதுபோன்ற திட்டங்கள் இளம் தலைமுறையினருக்கு மிகவும் உதவியாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ், தான் மிகவும் பயன்பெறுவதாகவும், தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக பயனாளி சிவராமன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில்மைய இணை இயக்குனர் திருமுருகன், மயிலாடுதுறை சிட்கோ மற்றும் மாவட்ட தொழில்முனைவோர் சங்க தலைவர் முத்துக்குமரன், சிட்கோ கிளை மேலாளர் செல்வகுமார், மின்சார வாரிய செயற்பொறியாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments