Breaking News

சீர்காழியில் அண்ணாமலையை கண்டித்து உருவபொம்மை எரித்த அதிமுகவினர்.


சீர்காழியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசிய பாஜக  மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு. 

                           

மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழியில் அதிமுக சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்  பொறியாளர் மார்கோனி தலைமையில் முன்னாள் எம்எல்ஏக்கள் பாரதி, சந்திரமோகன்  மற்றும்  மகளிரணி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். 


ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக பொது செயலாளர் இ.பி.எஸ் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வரும் அண்ணாமலை கண்டித்து கடுமையாக கண்டன கோஷங்கள் எழுப்பினர். திடீரென மறைத்து வைக்கப்பட்டிருந்த அண்ணாமலையின் உருவ பொம்மையை அதிமுகவினர்  எடுத்து வந்து  வந்து எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் உருவம் பொம்மையை பிடுங்க முயற்சித்தனர். இதில் அதிமுக வினருக்கும் 


போலீசாருக்கும் இடையே கடும் தள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது உருவ பொம்மையை எரிக்கும் முயற்சியில் அதிமுகவினர் பாட்டில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை உருவ பொம்மையின் மீது ஊற்றிய போது கூடி இருந்த அதிமுகவினர், மற்றும் போலீசார் மீது பெட்ரோல் தெளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீஸாரின் கடும் முயற்சியால் உருவ பொம்மையை பிடுங்கி தண்ணீரில் நனைத்தனர். 


பின்னர்    அண்ணாமலைக்கு எதிராக மீண்டும் கண்டன  முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Copying is disabled on this page!