Breaking News

அமலிநகர் அன்னைத்திருத்தல 84 வது திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் அன்னைத்திருத்தல 84 ஆவது திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடிமரத்தின் முன்பு மந்திரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடற்கரையோரம் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றபட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!