Breaking News

காரைக்கால் மேலவாஞ்சூரில் பள்ளி மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நாகதயாகராஜன் அடையாள அட்டை வழங்கினார்.


காரைக்கால் மாவட்டம் மேலவாஞ்சூரில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் நிதி உதவியுடன்  அப்பள்ளியில் பயிலும் 250 மாணவ, மாணவிகளுக்கு நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  நாகதியாகராஜன் ID CARD, BELT, DIARY ஆகியவற்றை வழங்கி, மாணவர்களுக்கான சிறிய நூலகம் READING CORNER பிரிவை துவங்கி வைத்தார்கள், இதில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு)  ராஜ்மோகன் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் மாணவ மாணவிகள் ஊர் பஞ்சாயத்தார்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

இதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் மாணவர்களிடம் நன்கு படிக்க வேண்டும் எனவும் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர்  மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

No comments

Copying is disabled on this page!