Breaking News

லீ புதுச்சேரி ஆக்கி சங்கத்தின் சார்பாக 15வது சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான சேம்பியன் கோப்பை.!

 


லீ புதுச்சேரி ஆக்கி சங்கத்தின் சார்பாக 15வது சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான சேம்பியன் கோப்பை போட்டி ஜூன் 9 முதல் ஜூன் 15 வரை ஆச்சார்யா பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது தொடக்க நிகழ்ச்சியில் லீ புதுச்சேரி ஹாக்கி சங்கத்தின் சேர்மன் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். ஆச்சார்யா பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் குருலிங்கம் போட்டியினை துவக்கி வைத்தார் இறுதிப்போட்டி ஜூன் 15ஆம் மாலை 3 மணி அளவில் நடைபெற்றது பெண்கள் பிரிவில்

 ஜெம்ஸ் ஹாக்கி கிளப் அணி முதல் பரிசும், மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் அணி இரண்டாம் பரிசும்,வெட்ரான் ஹாக்கி கிளப் அணி மூன்றாம் பரிசு பெற்றன.

ஆண்கள் பிரிவில் ஜெம்ஸ் ஹாக்கி கிளப் அணி முதலிடத்தையும்,ஒலிம்பியன் பெருமாள் ஹாக்கி கிளப் அணி இரண்டாம் இடத்தையும், வெட்ரான் ஹாக்கி கிளப் ஹனி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் மூத்த பயிற்சியாளர் மூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். டாக்டர் பழனி நோக்க உரை ஆற்றினார். சங்கத்தின் தலைவர் டாக்டர் குமரேசன் தலைமை உரை ஆற்றினார் சங்கத்தின் செயலர் அன்பழகன் சாம்பியன் கோப்பை போட்டியின் செயல் அறிக்கை வாசித்தார் சர்வதேச ஹக்கி விளையாட்டு வீரர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் சந்திரமோகன் விளையாட்டுக்கு புரவலர், சமூக ஆர்வலர் வெற்றி பெற்ற அணிகளுக்கு சாம்பியன் கோப்பையை வழங்கி பரிசளித்து சிறப்பித்தார். ஏற்பாடுகளை சங்கத்தின் பொருளாளர் சந்திரசேகர் மற்றும் மூத்த விளையாட்டு வீரர்கள் அரவிந்தன், சரவணன்,கமலக்கண்ணன், ஆகியோர் செய்திருந்தனர். இத்தகவலை சங்கத்தின் செயலர் அன்பழகன் தெரிவித்தார்.

No comments

Copying is disabled on this page!