பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் உருவ பொம்மையை எரிக்க முயற்சி, தொடர்ந்து உருவ படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரே தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் தந்தை பெரியாரை தர குறைவாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழக மண்டல பொறுப்பாளர் பெரியார் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது திடீரென சீமானின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர் போலீசார் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை பிடிங்கி சென்றனர் பின்னர் சீமானின் உருவப்படத்தை செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர், தொடர்ந்து சீமானை கண்டித்து கோஷங்களை எழுப்பிய தந்தை பெரியார் கழகத்தினர் சிறுவர்கள் 20க்கும் மேற்பட்டோரை சீர்காழி போலீசார் கைது செய்தனர்..
No comments