செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது..
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆண்டு தோறும் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு தாமரை பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதை யொட்டி பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். முன்னதாக பள்ளி மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பங்கேற்ற கோல போட்டி நடைபெற்றது மேலும் சிலம்பு சுற்றுதல் போட்டி, நடன போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மேலும் மாட்டுப் பொங்கல் உணர்த்தும் வகையில் மாட்டு வண்டியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சவாரி செய்து உற்சாகப்படுத்தினர். விழாவில் பள்ளித் தாளாளர் நெடுஞ்செழியன், நிர்வாக இயக்குனர் என் எஸ் குடியரசு ஆகியோர்கள் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அதேபோன்று கலைமகள் பள்ளி மற்றும் கல்லூரியிலும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
No comments