Breaking News

மயிலாடுதுறையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

 


மயிலாடுதுறையில் பொதுமக்களை கவர்ந்த உலக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  மாணவர்களின் சிலம்பாட்டம் நாட்டுப்புற கலைஞர்களின் பறைஇசை கிராமிய நடனத்துடன் நடைபெற்ற பேரணியில் மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராக முழக்கமிட்டு விழிப்புணர்வு:- 

தமிழ்நாட்டில் போதை ஒழிப்பு தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கள்ளசாராயம், போதைப்பொருட்கள், மெத்தனால் உள்ளிட்டவைகளை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மயிலாடுதுறையில் இன்று மாணவர்கள் நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற உலக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணி பொதுமக்களின் கவனத்தை பெறும் வகையில் மாணவர்களின் சிலம்பாட்டம், நாட்டுப்புற கலைஞர்களின் பறைஇசை, காளியாட்டம் உள்ளிட்ட நடனங்களுடன் சென்ற பேரணியில் குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சில்வர் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதை பொருள் ஒழிப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்திய மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை உபயோகித்தால் கண்பார்வை இழக்க நேரிடும், பசியின்றி உடல்நலம் கெடும், நினைவாற்றல் பாதிக்கப்படும், நரம்புதளர்ச்சி ஏற்படும் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி கலைநிகழ்ச்சிகளுடன் போதை பொருளுக்கு எதிராக மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

No comments

Copying is disabled on this page!