மது போதையில் லாரியை தாறுமாறாக ஓட்டி வந்த லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார்..
சென்னை அம்பத்தூர் சேர்ந்தவர் ராஜா லாரி டிரைவர் ஆன இவர் சென்னையில் இருந்து கம்பி லோடு ஏற்றிக்கொண்டு திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தார் வரும் வழியில் மது அருந்திய ஓட்டுனர் ராஜா பின்பு தாறுமாறாக லாரியை ஓட்டி வந்துள்ளார் இதை அறிந்த விக்கிரவாண்டி நெடுஞ்சாலை ரோடு போலீசார் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியில் அந்த லாரியை தடுத்து நிறுத்திய பொழுது லாரி ஓட்டுநர் அங்கு நிற்காமல் அதிவேகமாக லாரியை ஓட்டி வந்துள்ளார் இது பற்றி விக்கிரவாண்டி நெடுஞ்சாலை ரோந்து காவல் உதவி ஆய்வாளர் துரைராஜ் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை புறவழி சாலை பகுதியில் அந்த லாரியை தடுத்து நிறுத்தி லாரி ஓட்டுனர் ராஜாவை பரிசோதனை செய்ததில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்தது தெரிய வந்தது இதையடுத்து ராஜா மீது உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீசார் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்தனர் இதைத்தொடர்ந்து ராஜா ஓட்டி வந்த லாரியை போக்குவரத்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றபோது அங்கு ராஜா கடும் அலப்பறையில் ஈடுபட்டார் இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
No comments