பாண்டிச்சேரி கோல்ட் இன்னர்வீல் கிளப்பின் 6 மாத கால சேவையை பார்வையிட்டு சேர்மன் செல்வி இளங்கோ பாராட்டினார்.
இன்னர் வீல் பாண்டிச்சேரி கோல்டு கிளப்பில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான டிஸ்ட்ரிக்ட் சேர்மேன் பார்வையிடல் நிகழ்வு வெகு சிறப்பாக சின்ன கோட்டக்குப்பம் மகாத்மா காந்தி இல்லத்தில் நடைபெற்றது.
டிஸ்ட்ரிக்ட் சேர்மேன் செல்வி இளங்கோ பார்வையிட்டு கோல்டு கிளப்பால் கடந்த ஓராண்டுகாலம் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளையும் பன்னோக்கு சேவைகளையும் பாராட்டி மகிழ்ந்து கிளப்பின் தலைவரையும் உறுப்பினர்களையும் வாழ்த்தினார்.
கோல்டு கிளப்பின் நிறுவனர் பங்காரம்மாள் தலைமை விருந்தினராகவும், திருச்சபை பாதிரியார் அருட்திரு அந்தோணிசாமி அடிகளார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் அடிகளாருக்கு தொடர் சேவை மற்றும் அமைதிப்பணியை அங்கீகரிக்கும் வகையில் வாழ்நாள் - சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் இருபதுக்கும் மேற்பட்ட பல்துறை சாதனையாளர்களுக்கு நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் கிளப் அங்கத்தினர்கள், காஸ்மாஸ் இன்னர்வீல் கிளப் உறுப்பினர்கள், அவ்வை நகர் மகளிர் சங்க உறுப்பினர்கள் மற்றும் விருதாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments