Breaking News

வேலூர் மாவட்டம் காட்பாடி சன்பீம் பள்ளியின் முப்பெரும் விழா..

வேலூர் மாவட்டம் காட்பாடி சன்பீம் CBSE பள்ளியின் புக்டோப்பியா என்ற நூலகத்தின் திறப்பு விழா மற்றும் தேர்வின் மூலம் தகுதி பெற்றவளுக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.


 நிகழ்ச்சியில் பள்ளியின் துணைத் தலைவர் ஜார்ஜ் அரவிந்த் தாளாளர் தங்க பிரகாஷ் வழக்கறிஞர் அபிஷா ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் பள்ளியின் தலைவர் அரி கோபாலன் தலைமை வகித்து பேசுகையில் மாணவர்களின் சாதனை என்பது பள்ளிகளில் உள்ள நூலகத்தை பயன்படுத்துவதில் தான் உள்ளது நூலகம் தான் பள்ளிகளின் இதயமாகவும் விளங்குகின்றது. 


 நூலகங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி மற்றும் பொது அறிவு கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றது அரிஸ்டாட்டில் என்ற அறிஞர் கூறியது போல கல்வியின் வேர்கள் கசப்பானவை ஆனால் அது தரும் பழம் மிக மிக இனிப்பானது என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.


 முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை CMC மருத்துவமனையின் இணை இயக்குனர் தீபக் செல்வராஜ் கௌரவ விருந்தினராகவும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத்துணை தலைவர் தேவமணி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இதில் சிறப்பு விருந்தினர் பேசியபோது சன் பீம் பள்ளிகளின் புக்டோபியா நூலகத்தைப் பார்க்கும்போது பழங்களை நூலகங்களான நாளந்தா பல்கலைக்கழக நூலகம் தஞ்சாவூர் சரஸ்வதி நூலகம் நினைவுக்கு வருகின்றது மாணவர்களின் வாழ்க்கையில் புத்தகம்தான் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் நூலகங்களுக்கு சென்று தங்களின் அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.


 அதன்பின் சன்பீம் ஒலிம்பியாட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 110 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது விழாவில் CMC மருத்துவமனை மருத்துவர்கள் அலுவலர்கள் சன்பீம் பள்ளிகளின் முதல்வர்கள் துணை முதல்வர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். 


வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.

No comments

Copying is disabled on this page!