கேஎம்சிஹெச் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஈரோட்டில் அதிநவீன டயக்னாஸ்டிக் மையம் திறப்புவிழா!.
தற்போது மேலும் மேம்பட்ட சேவைகளை அளிக்கும் விதமாக அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது, கேத்லேப், எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே ஆகிய வசதிகளுடன் கூடிய இம்மையத்தை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ். முத்துசாமி திறந்து வைத்தார். ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ பிரகாஷ், நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி துணைத் தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் உரையாற்றிய டாக்டர் நல்லா ஜி பழனிசாமி உலகத்தரமான மருத்துவ சேவைகளை அளித்திட உற்றதுணையாக இம்மையம் விளங்கும் என்று குறிப்பிட்டார். நோயாளிகளுக்கு அதிநவீன மருத்துவ வசதிகளை அளிக்கும் நோக்கத்துடன் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளையும் பயிற்சி பெற்ற பணியாளர்களையும் இம்மையம் பெற்றுள்ளது என்று டாக்டர் தவமணி தேவி பழனிசாமி தனது உரையில் தெரிவித்தார்.
விரிவான மற்றும் துல்லியமான தகவல்களை அளிக்கும் இமேஜங் தொழில் நுட்பம், பலவிதமான பரிசோதனைகளுக்கான அதிநவீன ஆய்வகம், பல்துறை மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்கள், நோயாளிகளின் சௌகரியமாக பரிசோதனைகள் மேற்கொள்ள தேவையான வசதிகள் ஆகியவற்றை இம்மையம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
No comments