வில்லியனூர் பாரதியார் கிராம வங்கி கிளை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்..
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் அருகே புதுச்சேரி பாரதியார் கிராம வங்கி வில்லியனூர் கிளை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமில் வங்கியின் சேர்மன் ரத்தினவேல் தலைமை தாங்கி இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். முகாமில் கலந்து கொண்ட சுமார் 300- க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு,
உடல் எடை பரிசோதனைகள் செய்யப்பட்டு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டது.
வங்கியின் தலைவர் ரத்தினவேலு கூறுகையில்: வங்கியில் சுமார் 3 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறுவதாகவும் லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும் பொது மக்களுக்கு அனைத்து வகையான கடன் சேவைகளும், குறைந்த வட்டியிலும் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை அரசு வங்கியிலேயே அதிகமாகவும் வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்தார்.
No comments