ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடை வாடகை மீது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்பப்பெற வேண்டும். 6 சதவீத சொத்து வரி உயர்வு, வணிக உரிமைக் கட்டண உயர்வு, தொழில்வரி உயர்வு ஆகியவற்றை திரும்ப பெறவேண்டும். இந்தியா முழுவதும் டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின்கட்டணம் மாதந்தோறும் செலுத்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். சிறு வணிகர்களை பாதிக்கும் டி மார்ட், ஜியோ மார்ட் உள்ளிட்ட பெருவணிகத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடடைபெற்றது.
அதன்படி தூத்துக்குடியில் சிதம்பரநகர் பேருந்துநிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர், வடக்கு மாவட்ட தலைவர் சோலையப்பராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் வெற்றிராஜன், மாநில இணைச் செயலாளர் பீற்றர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்,
நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் ஆனந்த்பொன்ராஜ், மத்திய மாவட்ட மகளிரணி அமைப்புச் செயலாளர் ராஜம், திருச்செந்தூர் சாலை வியாபாரிகள் சங்க செயலாளர் மகேஸ்வரன்சிங் உள்பட பேரமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments