சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா!
சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை மற்றும் கிறிஸ்துமஸ் மர விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தலைமை ஆசிரியர் எட்வர்ட் ஜான்சன்பால் வரவேற்றார். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல உபதலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஜெயரட்சகர் முன்னிலை வகித்தார். சாயர்புரம் சேகரத்தலைவர் மனோகர் ஆரம்ப ஜெபம் செய்தார். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல குருத்துவக் காரியத்தரிசி இம்மானுவேல் வான்ஸ்றக் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை பாடல், கதைகள் மூலம் வழங்கினார். திருமண்டல உயர்நிலை, மேல்நிலை, சிறப்பு பள்ளிகளின் மேலாளரும், கிறிஸ்தவ தேவாலய பணியாளர்களின் நலவாரிய உறுப்பினருமான பிரேம்குமார் ராஜாசிங் வாழ்த்தி பேசினார். பள்ளி பாடகர் குழு பாடல் பாடினர். ஆசிரியை சந்திரா அறிமுக உரையாற்றினார். மாணவன் பியர்சன், ஜோசுவா, பாலாஜி மற்றும் ஆசிரியை கீதா, ஹேமலராணி ஆகியோர் வேத பாடம் வாசித்தனர். விழாவில் முன்னாள் மாணவர் கிருபாகரன், ஆல்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருமண்டல பொருளாளர் டேவிட்ராஜ் நிறைவு ஜெபம் செய்தார். விழா ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.
செ. அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments