புதிதாக துவக்கப்பட்ட ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் இளம்பகவத்..
ஏரலில் புதிதாக துவக்கப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் நேரடி சேர்கை நடைபெறவுள்ளதாக கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ம் ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது. இதில் சேர விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு நகல்களுடன் திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து உடன் சேர்க்கையினை உறுதி செய்து கொள்ளலாம். மேலும், ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை தொடர்பாக 99525 56469, 94882 01582, 94990 55813, 94990 55812 ஆகிய அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள், கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், வழங்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் வருகைக்கேற்ப உதவித்தொகை ரூ.750, மற்றும் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000-கூடுதல் உதவித்தொகையும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செ. அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments