பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை அதிக விலைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று வந்த பேஸ்புக் பதிவு..
புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த ராஜேஷ் (55), என்பவர் பேஸ்புக் பக்கத்தில் உங்களிடம் பழங்கால நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகள் இருந்தால் நாங்கள் மிக அதிக விலை கொடுத்துக் வாங்கிக் கொள்கிறோம் என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். இதில் குறிப்பிட்ட எண் மூலம் அதிலுள்ள நபர்களை தொடர்பு கொள்கிறார். அதற்கு அவர்கள்," உங்களிடம் என்ன இருக்கிறது" என்று கேட்கும் பொழுது "50 வருடத்திற்கு முந்திய ஐந்து ரூபாய் நோட்டு ஒன்று இருக்கிறது" என்று ராஜேஷ் குறிப்பிட்டார்.
இது பழங்கால நோட்டு தான். நாங்கள் இதை 4 லட்சம் ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறோம்" என்று கூறிவிட்டு ரூ. 4 லட்சம் ரூபாய்க்கு ஜிஎஸ்டி இன்னும் சில வரிகள் இருப்பதால் முதலில் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை எங்களுக்கு அனுப்புங்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். அதையடுத்து பணம் 35 ஆயிரம் ரூபாய் அனுப்பிய பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் ராஜேஷ்க்கு வரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஷ் இதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments