சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சைபர் க்ரைம் குற்ற பிரிவு காவல் நிலையத்தின் எச்சரிக்கை..
தற்போது சபரிமலை Season தொடங்க உள்ளதால் வரும் பக்தர்களுக்கு ஏதேனும் இறப்பு ஏற்ப்பட்டால் அவர்களுக்கு நஷ்ட ஈடாக தலா ரூ.5 லட்சம் தருவதாக கேரளா அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை சைபர் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களிடம் Whatsapp, Facebook, Instagram , Social Media மற்றும் Phone Call மூலம் தொடர்பு கொண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு Insurance Scheme-ல் சேர்வதற்க்கு பக்தர்களை தொடர்பு கொண்டு, இதில் சேர வேண்டும் என்றால் Processing Fees, GST போன்ற Tax-களை கட்ட வேண்டும் என்று சைபர் குற்றவாளிகள் ஐய்யப்பன் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் இதுபோன்று பணம் கேட்பதாக புதுவை சைபர் க்ரைம் காவல் நிலையத்திற்க்கு புகார்கள் வருகின்றன. சைபர் குற்றவாளிகள் கேட்பது போன்று எந்த வகை TAX-களையும் கேரளா அரசு கேட்கவில்லை. எனவே சைபர் குற்றவாளிகள் தொடர்பு கொண்டு Insurance Scheme-ல் சேர்வதற்க்கு TAX போன்று ஏதேனும் கேட்டால் நம்ப வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் க்ரைம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், வயதானவர்களை மற்றும் Pensioner-களை (ஓய்வு ஊதியம் பெறுவோர்) குறி வைத்து KYC Update செய்ய வேண்டும், ஆதார் Update செய்ய வேண்டும், Pensioner Life Certificate Update செய்ய வேண்டும், Pensioner Payment Order (PPO) Update செய்ய வேண்டும், Bank Account Number மற்றும் PAN Number Update செய்ய வேண்டும், என்று சைபர் குற்றவாளிகள் வயதானவர்கள் மற்றும் Pensioner-களிடம் (ஓய்வு ஊதியம் பெறுவோர்) வங்கி அதிகாரிகள் போல் தொடர்பு கொண்டு அவர்களிடம் OTP-யை பெற்று அவர்களின் வங்கி கணக்கிலிருந்து சைபர் குற்றவாளிகள் பணத்தை திருடுகின்றன. இது சம்பந்தமாக 50 புகார்களுக்கு மேல் பெறப்பட்டுள்ளன. இதில் வயதானவர்கள் மற்றும் Pensioner-கள் (ஓய்வு ஊதியம் பெறுவோர்) 40 லட்சத்திருக்கு மேல் பணத்தை இழந்து உள்ளனர். எனவே, இதுபோன்று எந்த Bank-ம் OTP, Pin Number, ஆதார் Number போன்றவற்றை நம்மை தொடர்பு கொண்டு கேட்கமாட்டார்கள். மேலும் வயதானவர்கள் மற்றும் Pensioner-களுக்கு (ஓய்வு ஊதியம் பெறுவோர்) சைபர் க்ரைம் சார்பாக அறிவுரை என்னவென்றால் OTP, Bank Details, Pin Number மற்றும் ஆதார் Number யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் பொதுமக்கள் இணைய வழியில் வருகின்ற எந்த ஒரு விளம்பரம், வேலை வாய்ப்பு, அதிக பணம் தருகிறோம், உங்கள் பிள்ளைகளை கைது செய்துள்ளோம், உங்கள் பார்சலில் போதைப்பொருள் சென்றது, உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம், உங்கள் SIM Card-ஐ முடக்க போகின்றோம் போன்று எந்த தகவல்கள் வந்தாலும் நம்ப வேண்டாம். உடனடியாக 1930 மற்றும் 9489205246/0413-2276144 என்ற எண்ணிற்க்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் இணைய வழி காவல் நிலையத்திற்கு www. cybercrime.gov.in ஆன்லைன் மூலமாகவும் புகார் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். 24x7 புதுச்சேரி சைபர் க்ரைம் பொதுமக்களுக்கு பணி செய்ய காத்திருக்கிறது.
No comments