உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் கோயில் பௌர்ணமி அன்னாபிஷேகம்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ காமாட்சி அம்மை சமேத கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி அன்னஅபிஷேகத்தை முன்னிட்டு கைலாசநாதருக்கு அன்னஅபிஷேகம் நடைபெற்றது விழாவில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் கைலாசநாதர் கோவில் அறங்காவல் குழு தலைவர் பிரகாஷ் உறுப்பினர்கள் ரமேஷ் பாபு சரஸ்வதி வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர்கள் மாலதி ராமலிங்கம், மனோபாலன் மற்றும் அபிராமி மோகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள் மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இந்த பௌர்ணமி நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் அறங்காவல் குழு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments