Breaking News

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்;

 


மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஒன்றானதுமான திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் காவிரி துலா உற்சவம் கடந்த 7 -ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டமானது துவங்கியது. பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற பக்தி கோசத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

இதில் எம்எல்ஏக்கள் நிவேதாமுருகன், ராஜ்குமார் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருத்தேர் நான்கு வீதிகளை சுற்றி 1 மணி அளவில் மீண்டும் நிலையை அடையும். பின்னர் மதியம் காவிரி நாலுகால் மண்டபத்தில் பரிமளா ரங்கநாதர் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. மேலும் இன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு துலா உற்சவத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!