2026-இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு இல்லை என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்..
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் முகமது ஜின்னா எழுதிய நோபல் ஜா்னி எனும் பயண நூல் வெளியிட்டூ விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக விசிக தலைவர் திருமாவளவன் எம்பி கலந்துகொண்டு நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவது அவசியமாகும் என விடுதலைச் சிறுத்தைகள் கூறிவருகிறது. ஆனால், அதற்கான அரசியல் சூழல் இன்னும் வரவில்லை.2026-இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு இல்லை. திமுகவும் அதிமுகவும் தங்களின் கூட்டணிக் கட்சிகளுடன் சோ்ந்து ஆட்சியமைப்போம் என்று அறிவித்தால் மட்டுமே கூட்டணி ஆட்சி என்பது சாத்தியமாகும்.
அந்த இரு கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள்தான் கூட்டணி ஆட்சி குறித்த கருத்தை வெளிப்படுத்துகின்றன. அவை மட்டுமே கூறுவதால், கூட்டணி ஆட்சி என்பது சாத்தியமாகாது. கூட்டணி ஆட்சி குறித்து அதிமுக முடிவெடுத்து வெளிப்படையாக அறிவித்த பிறகே அதுகுறித்து பேசமுடியும் என்றார்.
No comments