தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வாழ்த்து பெற்றனர்!
தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் தடகளப் போட்டிகள் 6.11.2024 முதல் 11.11.2024 வரை ஈரோடு மாவட்டத்தில் வைத்து நடைபெற்றது. போட்டியில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவி கனகலட்சுமி 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 1500 மீட்டர் ஓட்டத்தில் 3 ஆவது இடம் பிடித்தார்.
அதேபோல் 19 வயதுக்குட்பட்டோர் மாணவர்களுக்கான 800 மீட்டர் ஓட்டம், 1500 மீட்டர் ஓட்டம் மற்றும் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம் ஆகிய மூன்று போட்டிகளில் வென்று மாணவர் கருத்தபாண்டி முதலாவது இடம் பிடித்தார். மேலும், இதனால் அவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறக்கூடிய தேசிய அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேயர் ஜெகன் பெரியசாமி மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், நடராஜன் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க செயலாளர் ஸ்டீபன் ஆகியோர் உடனிருந்தனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments