அதிமுக புதிய நிர்வாகிகள் புதுவை மாநில செயலாளர் அன்பழகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி அதிமுகவிற்கு மாநில மற்றும் தொகுதி வாரியாக புதிய நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி புதியதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் மாநில செயலாளர் அன்பழகன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் தமிழ் வேந்தன் தலைமையில், புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக புதுவை மாநில செயலாளர் அன்பழகன் கலந்துகொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில தலைவர் தீபிகாவதி, மாநில
துணை தலைவர்கள் மணவாளன்,சுபாஷ், மாநில இணை செயலாளர்கள் சூர்யா நஜித்,மதன்குமார்,விக்னேஷ், மாநில துணை செயலாளர்கள் லோகேஷ், கார்த்திக்,திருமலை மற்றும் மாநில பொருளாளர் ராஜா உட்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments