இரவிலும் களைகட்டிய காவிரி துலாக்கட்டம் துலா உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி.
மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெறும் காவிரி துலா உற்சவத்தின் சிகர விழாவான கடை முக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். தீர்த்தவாரிக்குப் பிறகு பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர். இதனை ஏராளமான பக்தர்கள் இரவிலும் வந்து சுவாமி அம்பாளை வழிபட்டுச் சென்றனர். கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை அபிநயா நாட்டியாஞ்சலி பரதநாட்டிய குழுவின் சார்பில் துலா உற்சவ பத்தாம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டியப்பள்ளி மாணவிகள் பலர் பங்கேற்று, விநாயகர், முருகன், சிவன் மற்றும் அம்மனின் புகழ் பாடும் பாடல்களுக்கு நாட்டியம் ஆடினர். இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு ரசித்தனர்.
No comments