வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கடலூர் மாவட்டம் மஞ்சங்கொல்லை பகுதியைச் சார்ந்த வன்னியர் சமூக இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வன்னியர் சங்கம் மற்றும் பாமக நடத்திய விசிகவினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் சார்பில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி மாநில வன்னியர் சங்க தலைவர் மதியழகன் தலைமையில், புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் கணபதி, துணை அமைப்பாளர் வடிவேல், ஆகியோர் முன்னிலையில் வில்லியனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரண்யாவிடம் மனு அளித்தனர்.
அப்போது வன்னியர் சங்க செயலாளர் முருகன், பொருளாளர் நாவப்பன், மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments