தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்.
நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட கோரியும், சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்ட தலைவர் வீரையா, TNGEA மாவட்டத் தலைவர் கண்ணதாசன், மாவட்ட செயலாளர் செல்லமுத்து, TNRDPA மாவட்ட செயலாளர் உதயசங்கர், சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர், தமிழ்நாடு வி. ப சங்க மாவட்ட தலைவர் கோபால், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சேகர், தமிழ்நாடு ஊரகவளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் வேலுச்சாமி, தமிழ்நாடு ஆதிதிராவிட நலத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நவநீதகிருஷ்ணன், தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆட்சி பணியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் கலைச்செல்வி, தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மூவேந்தன், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் வினோத்ராஜா, தமிழ்நாடு எம். எஸ். பி செவிலியர் சங்கம் பிரசன்னா, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் பாக்கியமேரி, சத்துணவு ஓய்வூதியர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உடையணசாமி, மாவட்ட நிதிகாப்பாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இரா. இராதாகிருஷ்ணன் நிறைவுறையும், மாநில செயற்குழு உறுப்பினர் கலாதேவி நன்றியுரையும் ஆற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments