தமிழ்நாடு எச்எம்எஸ் உழைப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது!
தமிழ்நாடு எச்எம்எஸ். உழைப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி கனி ரெஸ்டாரண்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு எச்எம்எஸ் மாவட்ட கவுன்சில் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்து பேசினார். எச்எம்எஸ் மாவட்ட தலைவர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் காந்திசேகர் வரவேற்றார்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கிளை அலுவலகம் திறக்கப்படாத தொகுதிகளில் உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு அலுவலகம் திறக்க வேண்டும். எச்எம்எஸ் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும். சங்கத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். மாவட்டத்தில் எச்எம்எஸ் ஆட்டோ சங்கங்களை அனைத்து பகுதிகளிலும் தொடங்க வேண்டும். எச்எம்எஸ் உழைப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக 2025 ஆம் ஆண்டு சங்கத்தின் 2வது மாவட்ட மாநாடு நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஒட்டப்பிடாரம் செயலாளர் ராஜேஷ், கோவில்பட்டி செயலாளர் மணிகண்டன், விளாத்திகுளம் செயலாளர் வேலபுஷ்பம், திருச்செந்தூர் செயலாளர் பெமினாள், உழைப்பாளர் சங்க மாவட்ட பொருளாளர் பெசி நிர்மல், மாவட்ட துணைத்தலைவர் ராதா ஆனந்த், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல். ரயில்வே ஆட்டோ ஓட்டுனர் சங்கர் துணைத் தலைவர் மில்டன், மகளிரணி சந்திரா மணி. சரோஜா. மாலதி. நிவியா, விஜி பிரம்ம சக்தி மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிறைவாக முத்துராஜ் நன்றி கூறினார்.
No comments