நவகிரக புதன் ஸ்தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்..
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காட்டில் அமைந்துள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில். காசிக்கு இணையான 6 தலங்களில் ஒன்றாக இக்கோயில் விளங்குகிறது, ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோரமுகத்துடன் இங்கு அகோரமூர்த்தி தனிச்சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது கூடுதல் சிறப்பம்சமாகும். நவக்கிரகங்களில் ஒன்றான புதன் பரிகார தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. இங்கு சிவனின் கண்களில் இருந்து 3 தீப்பொறிகள் விழுந்தாகவும் அந்த இடங்கள் சூரியன் தீர்த்தம், சந்திரன் தீர்த்தம் , அக்னி தீர்த்தம் என்ற பெயரில் 3 குளங்களாக அமைந்துள்ளன. மேலும், படைப்பு கடவுளான பிரம்மா தனது மூச்சை அடக்கி இந்த கோயிலில் தியானம் செய்து வருவதாகவும் ஐதீகம் உள்ளது.இங்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்தார்.பின்னர் துர்கா ஸ்டாலின் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக புதிதாக கட்டப்பட்ட சுத்திகரிப்பட்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.
No comments