இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்ட திருக்கோயில் திருமண மண்டபத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் , மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்கள்.
திருப்புங்கூர், அருள்மிகு சிவலோகநாதசுவாமி திருக்கோயிலானது சைவ சமய குரவர்கள் திருஞானசம்பந்தர், அப்பர் மற்றும் சுந்தரரால் தேவார பாடல் பெற்றதும் 63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப்போவார் எனும் நந்தனார் வேண்டுதலுக்கு இணங்க சுவாமியின் கட்டளையின்படி நந்தி, பலிபீடம் மற்றும் கொடிமரம் வடபுறமாக சுமார் இரண்டு அடி விலகி காட்சி கொடுத்த ஸ்தலமாகும். மேலும் இரண்டாம் குலோத்துங்க சோழனின் வேண்டுதலுக்கினங்க மழை பெய்யவும் பெய்யும் அதிகனமழை நிற்கவும் மானியமாக 24 வேலி நிலம் பெற்றதுமான சிறப்புடைய ஸ்தலமாகும். 2021-2022ம் நிதி ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பு 31-ல், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி 10,610 (அடித்தளம் மற்றும் முதல் தளம்) சதுர அடியில் புதிய திருமண மண்டபம், தரைத்தளத்தில் உணவு அருந்தும் கூடம், முதல் தளத்தில் திருமண அரங்கம், மணமகன் மற்றும் மணமகள் அறை உள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் கட்ட ரூ.3.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் விஜயேஸ்வரன், உதவி ஆணையர் ரவிசந்திரன், செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் மற்றும் அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments