Breaking News

அமரன் திரைப்படத்தை தடை செய்ய போராட்டம் நடத்தி வரும் எஸ்.டி.பி.ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும் - அகில பாரத இந்து மகா சபா.


இந்திய நாட்டின் தேசப்பற்றுக்காக எடுக்கப்பட்ட அமரன் திரைப்படத்தை தடை செய்ய போராட்டம் நடத்தி வரும் எஸ்.டி.பி.ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும் என அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் பொதுச் செயலாளர் உளுந்தூர்பேட்டை செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தனியார் உணவகத்தில் அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் பெரி செந்தில் செய்தியாளர் சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் கடந்த தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படம் திரையிடப்பட்டது அந்தப் படத்தை  தற்பொழுது தடை செய்ய வேண்டுமென்று  எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள ராஜ் கமல் மூவி நிறுவனத்திற்கு நேரடியாக சென்று முற்றுகை போராட்டமும் நடத்தி உள்ளனர்.

படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று ஏனென்றால் சிறுபான்மையினரை தாக்கி எடுக்கப்பட்ட படம் என்றுகூறுகிறார்கள் ஆனால்அந்தப் படம் திரை காவியமோ கற்பனைக் காவியமோ அல்ல இந்திய ராணுவ வீரர் மேஜர்  முகுந்தன் உடைய உண்மைச் சம்பவங்களை வைத்து அந்தப் படத்தை எடுக்கப்பட்டுள்ளது வாழ்க்கை வரலாறுஆக தான் அந்தப் படம் எடுக்கப்பட்டது உண்மையிலேயே அந்த  படம் இந்திய ராணுவ வீரர்களின் கடுமையான உழைப்பு என்ன என்பதை இந்தத் திரைப்படம் காட்டுகிறது.

பாகிஸ்தானியர்கள் ஊடுருவதை தடுத்து நிறுத்துபோது அந்த விபத்திலேயே அவர் மரணம் அடைகிறார் அதுதான் அந்தப் படத்தின் மையக்கருத்தாக உள்ளது தவிர மற்றபடி யாரையும் எந்த மதத்தினரையும் தாக்கி இந்தப் படம் திரையிடப்படவில்லை, எஸ்.டி.பி.ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும் திரைப்படத்தை அல்ல எஸ்.டி.பி.ஐ அமைப்பை உடனடியாக தமிழக அரசும் மத்திய அரசும், தடை செய்ய வேண்டும் ஏனென்றால்  பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவை  அமைப்பில் இருந்தவர்கள் தற்போது எஸ்.டி.பி.ஐ பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள் தமிழகத்தில் பல்வேறு குழப்பங்களையும் சிறுபான்மையினையும் இந்திய வம்சாவளி சிறுபான்மையினரையும் மிகப்பெரிய தூண்டுதலாக நம் மதத்தை வைத்து படமாக எடுக்கப்பட்டுள்ளது என்று புதிதாக ஒரு கதையை ஜோடிக்கப்பட்டு இந்த எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் செயல்பட்டு வருகிறார்கள்.

உடனடியாக தமிழக அரசு மத்திய அரசும் எஸ்.டி.பி.ஐ அமைப்பை தடை செய்து தடுத்து நிறுத்த வேண்டும் இவர்கள் முற்றுகையிட்டதை வாபஸ் பெற வேண்டும் என அகில பாரத இந்து மகா சபை கோரிக்கையாக வைக்கிறது, அமரன் திரைப்படம் மக்களுக்கான படம் மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் ஏனென்றால் அது படம் அல்ல கற்பனை காவியம் அல்ல இந்திய ராணுவம்மேஜர் முகுந்தனுடைய உண்மையான கதை மக்கள் அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் எந்த ஒரு மதத்தையும் புண்படுத்தும் வகையில் அந்த படம் எடுக்கப்படவில்லை இது முழுக்க முழுக்க இந்திய நாட்டின் பற்று உள்ளது இந்திய தேசப்பற்று உள்ளவர்களுக்காக எடுக்கப்பட்ட படம் இந்தப் படத்தை தடை செய்யக்கூடாது இந்தப் படத்தை தடை செய்வதற்கு பதிலாக எஸ்டிபிஐ அமைப்பை தடை செய்ய வேண்டும் என கூறினார்.

No comments

Copying is disabled on this page!