என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் மூலம் சேர்ந்த மேலும் 25 மாணவர்களை நீக்க வலியுறுத்தல்..
புதுச்சேரியில் மருத்துவ படிப்புகளுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப் படுகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உட்பட மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 3 கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் முதல்கட்ட கலந்தாய்வில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் போலி சான்றிதழ் கொடுத்த 11 மாணவர்களை சென்டர் நீக்கியது.மேலும் 2ஆம் கட்டக் கலந்தாய்வில் 25 மாணவர்கள் போலி சான்றிதழ் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்டாக் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த நிலையில்,என்.ஆர்.ஐ இட ஒதுக்கீட்டில் போலி ஆவணம் கொடுத்து சேர்ந்த மாணவர்களை நீக்க வேண்டும், சிபிஐயில் புகார் அளிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சென்டாக் மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமையில் நிர்வாகிகள், சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
No comments