சீர்காழியில் ரூபாய் 8.42 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி. கட்டுமான பணிகள் தரமின்றியும், காலதாமதமாக நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டி அதிமுகவினர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பஸ் நிலையம் சீரமைக்கு பணி ரூ.8 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் தரைத்தளம், சுற்றுச்சுவர் ,சைக்கிள் ஸ்டாண்ட், உணவக விடுதி உள்ளிட்ட பணிகள் கடந்த ஓராண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணி கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்கு வரும் வாகன ஓட்டிகள், பயணிகள், மாணவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றன. இதெல்லாம் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்காழி புதிய பஸ் நிலையம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரி அதிமுகவினர் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மார்கோனி தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ சந்திரமோகன், மாவட்ட நிர்வாகி பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி புதிய பஸ் நிலையம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பணிகளை தரமாக செய்ய வேண்டும். சீர்காழி நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி நகராட்சி ஆணையர் மஞ்சுளா, பொறியாளர் கிருபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் பஸ் நிலையம் சீரமைக்கும் பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வாடுகளிலும் அடிப்படை வசதிகளை செய்து தரப்படும் என தெரிவித்ததன் பேரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேஷ், ரமாமணி, நகர பொருளாளர் மதிவாணன், ஊராட்சி மன்ற தலைவர் மாலினி, நகர மகளிர் அணி செயலாளர் லட்சுமி, வார்டு செயலாளர் சுரேஷ் ,சத்யராஜ் பாலு, கோகுல், செந்தில்குமார், மலையப்பன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில நிர்வாகி மார்கோனி செய்தியாளரிடம் கூறுகையில், சீர்காழி புதிய பஸ் நிலையம் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவில்லை என்றால் அதிமுக மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தார்
No comments