புதுச்சேரி பாடி பில்டர்ஸ் மற்றும் பிட்னஸ் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டியில் சுரேஷ் என்ற பாடி பில்டர் ஆணழகன் பட்டத்தை வென்றார்.
புதுச்சேரி பாடி பில்டர்ஸ் மற்றும் பிட்னஸ் இணைந்து மிஸ்டர் புதுச்சேரி 2024 போட்டி இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் புதுச்சேரி காரைக்காலை சேர்ந்த 56 வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டவர்கள் தங்களது உடல் அமைப்புக்கு ஏற்றவாறு தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இது பார்வையாளர்களை வியக்க வைத்தது. இதில் புதுச்சேரியை சேர்ந்த சுரேஷ் என்ற பாடி பில்டர் ஆணழகன் பட்டத்தை வென்றார்.
மேலும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி பாடி பில்டர்ஸ் மற்றும் பிட்னஸ் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
No comments