புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளின் அதிகப்படியான வருகையால் பல மணிநேர போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
புதுச்சேரிக்கு வாரத்தின் இறுதி 3 நாள்களில் அதிகளவில் வெளிமாநில மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தொடா் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இதனால், வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் புதுச்சேரி வந்துள்ளனர்.
இதனால் கடற்கரைச் சாலை, ஆம்பூா், செஞ்சி சாலைகள், நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி மற்றும் இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை சதுக்கங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன.புதுச்சேரி மரப்பாலத்திலிருந்து அரியாங்குப்பம் செல்லும் சாலையில் காலை மற்றும் மாலையில் வாகனங்கள் ஊா்ந்து செல்லும் நிலையே காணப்பட்டது.
போக்குவரத்து நெரிசலால் உள்ளூா் மக்கள் மருத்துவமனை உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்குக்கூட வெளியில் விரைந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டதாக ஆதங்கப்பட்டனா். புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்கும் வகையில் மேம்பாலங்கள் உள்ளிட்டவை அமைக்கவும் பொதுமக்கள் கோரி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments