இந்திய அரசியலமைப்பு நாளையொட்டி ஆதிதிராவிடர் நலத்துறையில் அதிகாரிகள் அம்பேத்கர் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை.
இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 26-ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்திய அரசியலமைப்பு நாளையொட்டி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கர் திரு உருவ படத்திற்கு துறை செயலர் முத்தம்மா, இயக்குநர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments