முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 107 வது பிறந்த தினம்.
முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 107 வது பிறந்த தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது இதனை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் விழா கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறையில் அமைந்துள்ள இந்திரா காந்தி திருவுருவ சிலைக்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா (காங்கிரஸ்), மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் (காங்கிரஸ் ) ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments