தூத்துக்குடியில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாமை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தார்..
தூத்துக்குடியில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையம் நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய 4 நாட்கள் புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்களை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் தொடங்கியது. அதன்படி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போல்பேட்டை, அலங்காரத்தட்டு, கிருஷ்ணராஜபுரம், திரேஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை சிறப்பு முகாம்கள் தொடங்கியது. இந்த முகாம்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, தூத்துக்குடி தொகுதி தேர்தல் மேற்பார்வையாளரும், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளருமான இன்பாரகு, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ், ஜெயக்குமார், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத் மற்றும் கருணா, மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments