ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மக்கள் நலத்திட்ட பணிகள் சரியாக நடக்கவில்லை என நேரு எம்.எல்.ஏ., துறை இயக்குனரிடம் புகார்..
உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேரு, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனை சந்தித்து புகார் அளித்துள்ளார்.
அதில், புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மேற்கொள்ளப் படும் வீடு கட்டும் மானிய உதவி வழங்கல், திருமண உதவித் தொகை, தொடர் நோய் உதவித்தொகை, ராஜா நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்திற்கான மின் இணைப்பு, குடிநீர் வசதி, சேர், டேபிள் மற்றும் சமையல் செய்வதற்கான உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட மக்கள் நல திட்ட பணிகள் எதுவும் சரியாக நடைபெறவில்லை.
அப்படியே பணிகள் நடந்தாலும் மிகவும் காலதாமதம் ஆகிறது என புகார் தெரிவித்தார்.இதற்கு, இயக்குனர் இளங்கோவன், தங்கள் தொகுதியின் மக்கள் நலத்திட்ட பணிகள் அனைத்தும் விரைந்து நடப்பதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
No comments