Breaking News

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக் துறையில் இளைஞர்களின் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான ரோபோ லீக் போட்டி!!


கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கேட் டெக்னாலஜி ஸ்கூல் ஆஃப் டிசைன் நிறுவனத்தின் சார்பில் தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக் தொழில்நுட்பப் போட்டி நடைபெற்றது. அறிவியல், தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ், பொறியியல், கலை மற்றும் கணிதம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய STREAM கல்வி வாயிலாக வருங்கால தொழில்நுட்பத்தை அறியும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் 50 கல்லூரிகளில் இருந்து வந்த  1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  பங்கேற்றனர். 

இளைஞர்களின் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் மூன்று பிரிவுகளாக  போட்டிகள் நடைபெற்றன. அதில் மாணவர்கள் ரோபோடிக்ஸ், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பேரழிவு மேலாண்மை போன்ற துறைகளில் தங்களது திட்டங்களை வெளிப்படுத்தும் விதமாக ஒரு போட்டியும்,  தானியங்கி ரோபோக்களை வடிவமைத்து தடங்கல்களை சமாளித்து செல்லும் ரோபோ ரேஸ் போட்டியும், ரோபோக்கள் ஒரு குறிப்பிட்ட பாதையினை பின்பற்ற செய்யும் பாஸ்ட் லைன் பாலோவர் போட்டி என மூன்று பிரிவுகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

இந்த போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் தொழில்நுட்பத்தை ஆக்கிரமித்துள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் துறையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டதோடு மாணவர்கள் STREAM கல்வியை கற்றுக் கொள்வதற்காக ஆயிரம் ரூபாய் காண பரிசு கூப்பன் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

No comments

Copying is disabled on this page!