பிரதான சாலையில் ஆபத்தான ஆற்றுபால வளைவு பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம்..
குண்டும் குழியுமான சாலை |
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் அருகே சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லக்கூடிய பிரதான சாலை ஆற்றுப் பாலத்தின் வளைவு மிகவும் ஆபத்தான வளைவாக உள்ளது. இந்த சாலையில் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருவதுடன் இரவு நேரத்தில் போதிய மின் வெளிச்சம் இல்லாமல் ஆற்று பாலத்தில் அமர்ந்து சமூக விரோதிகள் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த ஆற்றுப் பாலத்தின் சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது ஜல்லி கற்கள் சாலை முழுவதும் பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் எனவே உடனடியாக சாலையை சீரமைப்பதுடன் அப்பகுதியில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments