Breaking News

மாயூரநாதர் ஆலயம் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ரிஷப கோடி ஏற்றப்பட்டு பத்து நாள் உற்சவம் தொடக்கம்:-

 


மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி துலா உற்சவ தீர்த்தவாரி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கங்கை முதலான புண்ணிய நதிகள் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கிக் கொண்டதால் ஐப்பசி மாதம் 30 நாளும் மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து சுவாமி புறப்பாடாகி காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதே போல் வதான்யேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் இருந்து சுவாமி புறப்பாடாகி தீர்த்தவாரி நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு ஐப்பசி மாத துலா உற்சவம் கடந்த 17ஆம் தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து தின்நதோறும் மாயூரநாதர் ஆலயம் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்து சந்திரசெகர சுவாமிகள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் பத்து நாள் உற்சவம் சிவாலயங்களில் இன்று துவங்கியது. இதனை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயங்களில் இன்று கொடியேற்றம் நடைபெற்றது. மாயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் கொடிமரம் முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரிஷப கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து துலா உற்சவ கொடி மரத்திற்கும் விநாயகர் கொடிமரத்திற்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலயத்தில் தினந்தோறும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா மற்றும் தீர்த்தவாரி, வருகின்ற 10ஆம்தேதி மயிலம்மன் பூஜை, 12ஆம் தேதி திருக்கல்யாணம், 14ஆம்தேதி திருத்தேர், 15 ஆம் தேதி பிரசித்தி பெற்ற கடைமுக தீர்த்தவாரி உற்சவுமும், 16அம் தேதி முடவன் முழுக்கு உற்சவமும் நடைபெறவுள்ளது இதேபோல் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் துலா உற்சவத்தை முன்னிட்டு ரிஷப கொடியேற்றப்பட்டது கொடிமரத்தின் முன்பு விநாயகர், சண்டிகேஷ்வரர் எழுந்தருள செய்யப்பட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இவ்வாலயத்திலும் திருக்கல்யாணம் திருத்தேர் பஞ்சமூர்த்திகள் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Copying is disabled on this page!